Sale
திருக்குறள் (குறுவுரையும் , குறுங்கதைகளும் -அறத்துப்பால்) ( Thirukural (Kuruvuraiyum,Kurungadhaigalum-Arathuppaal)
பா. அய்யாசாமி அவர்கள் குறுகத்தரித்த குறளுக்குக் குறுகத்தரித்து யாத்துள்ள உரை வெகு சிறப்பு. சிறப்பு என்னவெனில் ஒவ்வொரு அதிகார முடிவிலும் ஒரு சிறுகதையோடு அதிகாரக் கருத்தைத் தொகுத்தளித்துள்ளது உரையுலகுக்கு அரும் முயற்சி.
அந்தணர் என்ப அறவோர் மாட்டே” அல்லவா! அதனாற்றான் அறத்துப்பாலில் இருந்து உரையைத் தொடங்கியுள்ளார்.
சிறுகதை, நாவல், குறும்பட இயக்கம் என்ற தளங்களில் சிறப்பான பதிவுகளை அதிர்வுகளாக்கிய இப்பெருமகனார்க்கு உரையோவியமும் சிறந்த முறையில் கைவரப்பெற்றிருக்கிறது.