Sale
ஊக்கமது (Ookamadhu)
நம் வாழ்வில் நாம் சந்திக்ககூடிய எல்லாவித சூழ்நிலைகள், தடைகள், தடுமாற்றங்கள், ஏமாற்றங்கள், எதிர்ப்புகள், துரோகங்கள் எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம், நம் மனம் தெளிவின்றி இருப்பதே! நாம் யாராக இருந்தாலும், எந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் நாம் ஒவ்வொருவரும் எல்லாவற்றையும், தாண்டி தாங்கி வாழ, நமக்கு ஊக்கம் இன்றியமையாதது. ஊக்கம் என்பது உடலின் குருதி, உள்ளத்தின் ஓவியம், உயிரின் துடிப்பு. ஊக்கமில்லா உயிர்களின் மெய்கள் எல்லாம் பொய்யானவை. நம் வாழ்வை சிறப்பான முறையில் வாழ வாழ்ந்தவர்களின் அனுபவங்களை நாம் கேட்க வேண்டும். அவர்களின் அனுபவங்களை நம் வாழ்வின் அடிதள முயற்ச்சியாய் எடுத்து செயல்பட வேண்டும். இப்புத்தகம் வாழ்வை சார்ந்த எண்ணற்ற இரகசியங்கள், அனுபவங்கள், வாழ்க்கை தத்துவங்கள் அடங்கிய ஒரு புதையல் என்பதை ஒவ்வொரு பக்கத்திலும் உணர்வீர்கள்!