Sale
மதுரைக் காஞ்சி (மூலமும் எளிய உரையும்) (Madurai Kaanji)
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் அவைக்களப் புலவர் மருதன் இளநாகனார் இயற்றிய மதுரைக் காஞ்சி, சங்க இலக்கியத்தில் உள்ள பத்துப்பாட்டில் உள்ள ஒரு பாடல். இப்பாடலில், பாண்டியனின் முன்னோர்களின் சிறப்பு, பாண்டியனின் போர்த்திறன், வெற்றி, கொடை, புகழ், மதுரை நகரின் மாட்சி, வழிபாட்டு இடங்கள், நாளங்காடி, அல்லங்காடி, மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை விரிவாகக் கூறி, நெடுஞ்செழியனுக்கு வாழ்க்கையின் நிலையாமையைச் சுட்டிக்காட்டி, அவனை வாழ்நாட்கள் முழுதும் மகிழ்ச்சியாக இருக்குமாறு புலவர் வாழ்த்துகிறார். இப்பாடல் ஒரு காணொலிபோல் கற்பவர்களின் மனத்திரையில் செய்திகளைப் பதிவு செய்கிறது. இப்பாடலைக் கற்பதற்கு, முனைவர் பிரபாகரனின் இந்த நூல் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் மிகுந்த பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.