Sale
VasanthaKaala Vinmeengal (வசந்தகால விண்மீன்கள்)
இவர் கொண்டுவந்திருக்கும் புதிய கவிதைத் தொகுப்பான “வசந்தகால விண்மீன்கள்” பூமிக்கு வெளிச்சம் தூறப் போராடுகின்றன.
உழைப்பவனுக்கு
ஊறுகாய்
உறங்குபவனுக்கு
பிரியாணி
மனிதனைப் பார்த்து
சிரிக்கிறது இயற்கை
என்று சமூகத்தில் நடக்கும் ஊழலை, முரணை எளிய வார்த்தைகள் கொண்டு ஈட்டி எறிந்திருப்பது அருமை. இந்த மண்ணில் விவசாயம் செய்தவன் தெருவில் பிச்சை எடுக்கும் அவலத்தையும், சுரண்டல் வாழ்வின் சுக வாழ்வையும் இந்தக் கவிதை
சுட்டிச் செல்கிறது.