Sale
நேருவின் மரபு (Nehruvin Marabu) இங்கு நேருவின் மரபு அய்ந்து கட்டுரைகளில் சொல்லப்படுகிறது. நேருவின் நாடாளுமன்ற ஜனநாயக மாண்புகள்– முன்மாதிரிகள் பேசப்படுகின்றன. அடுத்து நேருவின் நிர்வாக முறையில் எதையெல்லாம் நடைமுறையாக்க விழைந்தார்– யாருக்கான நிர்வாகம் என்பதில் அழுத்தம் தந்தார் என்பதை பார்க்க முடியும். நேருவின் சோசலிசம் குறித்த கட்டுரையில் விடுதலைக்கு முன்னரான அவரது பேச்சு, விடுதலை இந்தியாவில் பிரதமரான பின்னர் அவரின் பொருளாதார நடைமுறைகள் பேசப்படுகிறது. அடுத்து இன்று இந்தியாவின் அரசியல் கருப்பொருள்– நடைமுறை கலவர பிரச்சனையாகியுள்ள மதம் குறித்த– செக்யூலரிசம் குறித்த நேருவின் அணுகுமுறை பேசப்பட்டுள்ளது. நேருவின் மொழிக்கொள்கை கட்டுரை இன்றுவரை இந்தி பேசாத மாநிலங்களுக்கு அரணாக உள்ளதைப் பேசுகிறது.