Sale
பெரியாரின் பொதுவுடைமை புரிதல் ( Periyarin Puridhal) இந்நூலில் பரவலாக விவாதிக்கப்படும் வலுவான கருத்தாக்கங்களின் பிரதிபலிப்பை – தமிழ்நாட்டின் வளர்ச்சியின் பலனை கடந்த 60 ஆண்டுகளில் எச்சக்திகள் பெரும் ஈவாக அடைந்துள்ளன என்ற மதிப்பீட்டில்தான் பெறவியலும். அதற்கு வெளித்தெரியும் அரசியல் சொல்லாடல்களைத் தாண்டி பொருளாதார மேம்பாட்டு அம்சங்களை நுணுகிப் பார்க்கவேண்டிய தேவையிருக்கிறது. பலன்கள் பரவலாக வெகுமக்களை சென்றடைந்துள்ளதா– இல்லை சிலரிடம் செல்வக் குவிப்பை உருவாக்கியுள்ளதா என்பதும் பார்க்கப்படவேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.
பெரும் பக்கங்களை கொண்ட மேற் சொல்லப்பட்ட தொகுப்புக்களை– உள்ளார்ந்து முழுத்தொகுப்பையும் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை சிலரிடமாவது தூண்டுவதற்கு துணையாக இச்சிறு நூல் இருக்கும் என நினைக்கிறேன்.