Sale
சீட்டுக்கவி இலக்கியம் (Seetukkavi Ilakiyam) என்ற தலைப்பிலான ஆய்வு நூல் முனைவர் அ.ஜெயரோஜா அவர்களின் கடும் உழைப்பில் உருவான நூல். பழம் புலவர்களின் ஆற்றலையும், புலமைதிறனையும் எடுத்து உரைக்கும் நூல். புலவர்கள் பாடிய சீட்டுக்கவியுடன் இன்றைய கடிதம் எழுதும் முறையை ஒப்பிட்டுக் காட்டியிருக்ககிறார். அரசர்களை சந்திக்கும் முன் முகமறியாத தன்னை பற்றி அரசர்கள் அறிந்துகொள்ளும் வகையிலும், அரசசபையில் வெகுமதி செய்ய வலியுறுத்தியும் பாடப்பட்டிருக்கும் பாடல்களை சீட்டுக்கவி என்றனர். இந்த நூலில் ஆசிரியர் சீட்டுக்கவி இலக்கியம் என அறிமுகம் செய்திருப்பதை உற்று நோக்குகையில் கடிதம் எழுதுதல் எனபது ஒரு கலை. ஆயக்கலைகள் அறுபத்து நான்கினுள் லிகிதம் வரைத்தலும் ஒரு கலை. ஆகவே,ஆசிரியர் இலக்கியமாகக் காட்டியிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.