Sale
நகரும் ஓவியங்கள் ( Nagarum Oviyangal )
இறைவன் படைப்பில் ஒரு அதிசயம், மனிதன். மனிதன் படைப்புகளிலே ஓவியமும், எழுத்தும் பெரும் அதிசயம்.
ஓவியங்கள் படைப்பாளியின் திறனை மட்டுமல்ல, அவனின் எண்ணங்களையும் சேர்த்தே பிரதிபலிக்கின்றன.
எழுத்தாளனின் எழுத்துக்கள் அவனது எண்ணங்களை மட்டும் பிரதிபலிப்பதில்லை அவனின் எதிர்பார்ப்புகளையும் எழுத்தில் வடித்துவிடுகின்றான்.
நகரும் ஓவியங்களான பட்டாம்பூச்சிகள் செடி கொடிகளில் பறந்து பறந்து நம் கண்களுக்கு விருந்தாகும். அதுபோல,
நல்ல எண்ணங்களோடும் நேர்மறை எதிர்பார்ப்புகளோடும், எழுத்தாளனின் எழுத்துக்கள் சமூகத்தில் சுழன்று அது நகரும் ஓவியங்களாய் வாசகர் கண்களில் படர்ந்து நல்ல உணர்வினை அவர்களின் மனதிற்குள் ஏற்படுத்தினால் சமூக மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது என்று உணர்ந்து படைத்ததுதான் இந்த படைப்பு.