Sale
எனக்குள் நான் வரைந்த உயிரோவியம் என் சதை பிளந்து வெளிவந்தது ஒரு நாள். கதறி அழுதது, கைகால்கள் அசைத்தது, கண் விழித்து பார்த்தது என் மகளாய். அன்பு மகளை அழைப்பதற்கு அலசி ஆராய்ந்து தேர்வு செய்தோம் ஒரு பெயரை. அழகிய மகளுக்கு அகம் மகிழ “மெல்லினா” என பெயரிட்டோம்.
நாட்கள் நகர்ந்தன, மெல்லினா மெதுவாக தவழ்ந்தாள், மெல்லமாய் நின்றாள், பக்குவமாக நடந்தாள், மழலையாய் பேசினாள், பள்ளி செல்ல ஆரம்பித்தாள், பல கதைகள் பகிரச்செய்தாள். அவள் சந்தேகங்களை சரிசெய்துக்கொள்ள அவ்வப்போது கேள்விகள் கேட்பாள். அவள் கேட்கும் கேள்விகள் சில நேரம் சிரிக்க வைத்தது, பல நேரம் சிந்திக்க வைத்தது.
எனக்குள் சிரிப்பையும் வியப்பையும் ஏற்படுத்திய எனது மகளின் கேள்விகளின் தொகுப்புதான் இந்த நூல். மெல்லினாவை மையப்படுத்திய எனது படைப்பு இந்த “மெல்லினமே”. இந்நூலை படிக்கும் ஒவ்வொருவருக்கும் மெல்லினாவின் கேள்விகள் சுவாரசியத்தை தரும் என்பதை உறுதியளிக்கிறேன்.