Sale
அகத்தின் உணர்வுகளை புறத்தே காட்ட வாய்மொழி தேவையில்லை விழியின் மொழியே போதும்.துன்பங்கள் பல சந்தித்து, வருடங்கள் பல கடந்த போதிலும் மனதைத்திருடியவனை மணாளனாக்குவதில் இருக்கும் சுகமே தனி என்று வைராக்கியமாக மனங்கவர்ந்தவனின் கையால் மஞ்சள் நாண் வாங்கி சாதித்தவள் தான் நம் கதையின் நாயகி லயா @ நிகல்யா . ஆண்மையின் இலக்கணமாய், தொழில் சாம்ராஜ்யத்தில் முடிசூடா மன்னனாக மங்கையர்களின் மனதைக் கவரும் வண்ணம் வலம் வந்தவனின் சுவாசத்தில் கலந்தவளை உடலிலும் கலந்திடச் செய்தவனே நம் கதையின் நாயகன் ருத்ரன் @ மனுருத்ரன். வாழ்வில் தோன்றும் உணர்வுகள் பலவிதம் என்றாலும் இந்த காதல் மட்டும் ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையிலும் அவர்களின் உயிரோடும்,உணர்வுகளோடும் ஒன்றென கலந்திருக்கும் ஒருவிதமான அதிசய உணர்வு.
” உன்னை காணும் அந்த
சில நொடிகளுக்காக
பலமணிநேரம் காத்திருக்கும்
அந்த நேரத்திற்கு தெரியும்
நான் உன்மீதுகொண்ட
காதலின் உயரம்”
என்றவளின் பிரமிக்கவைக்கும் காதல்கதை தான் ” சுவாசம் தொடும் தூரத்தில் ” (swasam thodum thoorathil) வாருங்கள் வாசிக்க …..இல்லை அவர்களுடன் சேர்ந்து சுவாசிக்க.