Sale
திமிரழகி (Thimiralagi)
எண்ணற்ற காதல் கதை களங்கள் கடந்து வந்திருக்கும் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் . “திமிரழகி” ஓர் பெண்மையின் மாறுபட்ட பரிணாமம். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்றவற்றோடு ஒருசேரும் ஒப்பில்லா ஓர் குணம் “திமிர்” ஓர் ஆணின் ரசனைக்கு உயிர் கொடுத்து நண்பனாய், காதலனாய்,காவலனாய் ,கணவனாய் அவன் ரசிக்கும் தன்னவளின் அழகிய பெண்மையின் தொகுப்புகளே ,இந்த ” திமிரழகி”. இளம் காதலர்கள், காதல் திருமணம் செய்தவர்கள்,வயோதிக காதலர்கள், காதல் துணை இழந்தவர்கள் போன்றோருக்கு,தங்களின் காதல் நினைவு கூட்டினை ஒருமுறையாவது என் வரிகள் வருடும் என நம்புகிறேன்.