Sale
விதையே விழித்தெழு (Vidhaiyae Vizhithelu)
மனிதர்கள் பிற உயிரினங்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆகியவற்றை ஆரோக்கியமாக பாதுகாக்க வழிவகை செய்வதே உண்மையான வளர்ச்சி என இயற்கை ஆர்வலர்கள் எடுத்துரைக்கின்றனர். இதில் ஏதேனும் ஒன்றிற்கோ அல்லது இம்மூன்றிற்குமோ அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு செயல் மற்றும் செயலுக்கான யுக்திகளைத்தான் மண்ணில் புதைக்க வேண்டுமே தவிர அம்மூன்றின் பாதுகாப்பு வேண்டி போராடுபவர்களை அல்ல.
மரம், மழை, மலை, காற்று, ஆகாயம், மண், மண்புழு, வேளாண்மை, பூச்சிகள், பறவைகள், சிட்டுக் குருவிகள் இன்னும் பிற ஜீவராசிகள், குளங்கள், குட்டைகள், ஆறுகள், ஏரிகள், கிணறுகள், கண்மாய்கள், கால்வாய்கள் இவைகள் இப்பூமியில் உயிர்வாழ ஏதுவாக நல்ல நல்ல விதைகளை விழித்தெழச் செய்யும் பட்சத்தில் மனிதர்களும் மகிழ்வாக வாழ்வார்கள், அடுத்த தலைமுறையும் அழகாகத் தலை நிமிருமல்லவா!