நீந்தத் தெரியாத மீன்கள் (கவிதைத்தொகுப்பு)

140.00

+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)

Book Outline

நீந்தத் தெரியாத மீன்கள் (Neendha Theriyaadha Meengal)

வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தீவு. அது காதல் தீவா? கன்னித்தீவா? கனவுத்தீவா? என்பது அவரவர் பெற்ற ஒரு வரம்.

கோபத்தில் மெளனம்; விலக்கும் போது விவேகம்; புகழில் அமைதி; வெற்றியில் பணிவு; தோல்வியில் துணிவு; உதாசீனத்தில் உடைபடுதல்; அவமானத்தில் அழுகை; இத்தனையும் அனுபவித்து இருந்தாலும் நமது காயங்களை வலிகளை மறக்க முடியாமல் தவித்து தான் போகிறோம், அதன் வெளிப்பாடுகள் தான் கவிதைகள்.

மரபுக்கவிதை வரிசையில் பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், வாலி இவர்களை மறந்து அல்லது மறைத்து புதுக்கவிதை, ஹைக்கூ, தூறல் என்று வழிநடந்து இன்று ஒருவரிக்கவிதையிலே உள்ளம் பூரித்து மகிழ்கிறோம்.

ஒருவரிக்கவிதையா? என்னது? எப்படி என்று நான் யோசிக்கையில் கண்ணில்பட்டது “எனக்காகக் காத்திரு; உனக்காக வருகிறேன்” என்ற வரிகள். ரசித்துப் பார்க்கும்போது அதுவும் ஒரு அழகான கவிதை தான் என தோன்றுகிறது.

ஆசிரியரின் கற்பனைக் குதிரைகள் ஓடிய ஓடுகளத்தில் உருவான கவிதைகள் ஏராளம்; அவற்றில் உருமறைந்தவை அதிகம்; அவற்றில் சில மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு இப்போது புத்தகமாக வெளிவந்து உள்ளது.

Additional information

Customer Reviews